புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை. கழிவறை இருந்தும் தண்ணீர் இல்லாததால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.