காட்சிபொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2025-03-30 16:34 GMT

கடத்தூர் ஒன்றியம் கேத்துரெட்டிப்பட்டியில் ஒன்றிய பொது நிதியில் இருந்த புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்மோட்டார் பழுதால் கடந்த 6 மாதகாலமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் கோடை வெயில் தொடங்கிய நிலையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காட்சிபொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-மனோகரன், கேத்துரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்