பர்கூர் காரகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ராமசாமி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே தாமதம் இன்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?.
-ராஜேஷ், பர்கூர்.