மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு தென்றல் நகர் தெருவில் நல்ல தண்ணீர் குழாயில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த தண்ணீர் வருகின்றது. இந்த தண்ணீர் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் எற்படுத்துகின்றது. மேலும் இந்த தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.