அரியலூர் மாவட்டம் தாபழூர் ஒன்றியம், காசாங் கோட்டை காலனி தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தெருவின் முகப்பு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் மிகக் குறைந்த வேகத்தில் குறைந்த அளவிலான தண்ணீர் வருவதினால் இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குழாயை சரி செய்வதுடன், இப்பகுதியில் கூடுதலாக பொதுக் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.