பாலக்கோடு தாலுகா பேளாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட காவாப்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் இது கடந்த சில மாதங்களாக நீண்ட நாட்களாக மோட்டார், மின்சாதனபெட்டி பழுதடைந்து செயல்பாடு இன்றி புதர் மண்டி உள்ளது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
-ஈஸ்வரன், காவாப்பட்டி.