திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த குருவம்பட்டி கிராமம் அர்ஜுனன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் குடிநீர் பழுதாகி சேதமடைந்துள்ளது. இதனால் புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.