பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்திற்கு குடிநீர் வசதி இல்லை. தற்போது கோடை காலம் என்பதால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் குடிநீர் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.