திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு பாரதி நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.