கரூர் மாவட்டம், மண்மங்கலத்திலிருந்து என்.புதூர் செல்லும் மெயின் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடிபம்பு ஒன்று போடப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 50 குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கருப்பண்ண சுவாமி கோவிலுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த அடிபம்பில் பழுது ஏற்பாட்டு அப்படி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபம்பை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
