குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-03-23 09:50 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், கடம்பூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறியும், இத்திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்