விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலையில் இருந்து போலீஸ் நிலையம் செல்லும் சாலையின் பேவர் பிளாக் சேதமடைந்து பல இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் செல்கின்றது. இதனால் அந்த சாலை சேதமடைந்து வருவதோடு குடிநீரும் வீணாகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?