வைராகுடியிருப்பு பகுதியில் குருசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், வைராகுடியிருப்பு