குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-03-09 18:09 GMT

மதுரை மாவட்டம், சேடபட்டி யூனியன், காளப்பன்பட்டி, கம்மாளபட்டி போன்ற கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆண்டிபட்டி, சேடபட்டி கூட்டுகுடிநீர் வசதிகள் இருந்தும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருவதோடு பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்