வேலூர் மாநகராட்சியில் 4-வது வார்டான செங்குட்டை பகுதியில் உள்ள தரை நீர்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் குடிநீர் நிரப்பப்பட்டு, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்பும்போது தொட்டி நிரம்பியதும் கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் இல்லாததால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வெளியேறுகிறது. இதன் காரணமாக குடிநீர் வீணாவதுடன் இந்தத் இடத்தில் அமைந்துள்ள ரேஷன்கடை பகுதி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
-பி.துரை, கல்புதூர்.