பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-03-09 13:49 GMT

கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, மலையம்பாளையத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த நீர்த்தேக்க தொட்டி செயல்பாடு இன்று உள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்