சென்னை அசோக்நகர், 3 வது அவென்யூ பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு வேறு பகுதிகளுக்க அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.