வீணாகும் குடிநீர்

Update: 2025-03-02 16:23 GMT

 பர்கூர் தாலுகா காரகுப்பத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இங்கிருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காரகுப்பம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல மாதங்களாக வீணாகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், பர்கூர்.

மேலும் செய்திகள்