திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர், சீனிவாசபுரம் முதல் மெயின் ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக பூமிக்கு அடியில் புதைக்கபட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாகிறது.மேலும், வீணாகும் தண்ணீர் சாலையில் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தி ஆகும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.