குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2025-03-02 10:21 GMT

கோத்தகிரி மார்க்கெட்டில் சுமார் 300 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் தேவைக்காக தொட்டி அமைக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 வாரங்களாக அந்த தொட்டியில் குடிநீர் நிரப்பப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அங்கு குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்