பொதுமக்கள் அவதி

Update: 2025-02-23 09:50 GMT

பீளமேடு அருகே ஜெகநாதபுரம் ஆவாரம்பாளையம் சாலையில் தபால் நிலையம் எதிரே உள்ள குழாயில் உப்பு தண்ணீர் சரிவர வருவது இல்லை. குறைவாக மட்டுமே வந்து கொண்டு இருந்தது. தற்போது அதுவும் வருவது இல்லை. இதனால் உப்பு தண்ணீர் கிடைக்காமல் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் வேறு உப்பு தண்ணீர் குழாய்களும் இல்லை. இதனால் அங்கு சீராக உப்பு தண்ணீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்