சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-02-16 14:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இப்பணிக்காக 15-வது வார்டு பகுதியில் சாலை தோண்டப்பட்டது. தற்போது வரை இச்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்