வீணாகும் குடிநீர்

Update: 2025-02-16 12:16 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் மேட்டுத்தெரு செல்லும் வழியில் தண்ணீர் பிடிப்பதற்காக பொதுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் அந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாய் உடைந்து, குடிநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்