திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் பொதுப்பணித்துறையின் விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் முகப்பு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரையொட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயிலிருந்து தினமும் அதிக அளவிலான குடிநீர் வெளியேறி வருகிறது. உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாகியும் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி கால்வாயில் பாய்ந்து கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இங்கு காணப்படும் குடிநீர் குழாய் உடைப்பை இனியும் கிடப்பில் போடாமல் விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ராகவ், திருப்பூர்.