குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2025-02-16 08:53 GMT

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருவிதாங்கோடு அடுத்த சேவியர்புரம் பகுதியில் வயக்குளம் உள்ளது. இந்த குளத்தை விவசாயத்திற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் பாசி படர்ந்து தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், கரைகளும் சேதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாருவதுடன் கரைகளையும் சிரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ஜினி, சேவியர்புரம்.

மேலும் செய்திகள்