ஆலப்பாக்கம் அருகே சீனுவாசபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மின்மோட்டாரை சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.