குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-02-09 13:50 GMT
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன் பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பொது குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்தும் குடிநீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
,

மேலும் செய்திகள்