வீணாகும் குடிநீர்

Update: 2025-02-02 16:41 GMT

மேட்டூர் வட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில், தர்மபுரி பிரிவு சாலையில் குடிநீர் குழாய் பழுதடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் பஸ் நிலையம் சேறும், சகதியுமாக உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், முதியோர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷபிரவீன், கச்சராயனூர்.

மேலும் செய்திகள்