தாளவாடியில் இருந்து ஓசூர் செல்லும் சாலை சீரமைப்பு பணியை தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?.