குடிநீ்ர் தட்டுப்பாடு

Update: 2025-02-02 15:00 GMT
ஆலப்பாக்கம் அருகே சீனுவாசபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அங்குள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்மோட்டார் பழுதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றமுடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 7 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்