சின்னசேலம்- பாக்கம்பாடி பள்ளி செல்லும் சாலையில் ஆழ்துளை கிணறுடன் கூடிய மினி குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மின்மோட்டார் பழுதடைந்ததால் மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக இருக்கும் மினிகுடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.