தூர்வாரப்படாத ஏரி

Update: 2025-02-02 13:47 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் கொக்கராம்பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரி தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் உள்ளதால் மழை பெய்யும்போது ஏரிகளில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்