குளச்சல் அருகே உள்ள பூச்சாத்தான்விளையில் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் தண்ணீரை விவசாய நிலங்கள் பாசன வசதிக்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த கால்வாயில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், தண்ணீர் மாசடைவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் காணப்படும் குப்பைகளை அகற்றி தூர்வாருவதுடன், குப்பைகள் கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், குளச்சல்.