மூடி இல்லாத மேல்நிலை நீர்தேக்க தொட்டி

Update: 2025-01-19 10:23 GMT

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, கருமாரியம்மன் நகர் பகுதியில் பழமையான மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி சிதலம் அடைந்து மேல் பகுதி மூடாமல் திறந்து கிடக்கிறது. பறவைகளின் கழிவுகள் கலப்பதாலும், பராமரிப்பு இன்றி காணப்படுவதாலும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் உண்டாகும் முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து மேல் பகுதியை மூட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்