மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் காட்டுக்கொட்டாயில் ஆழ்துளை கிணறுடன் கூடிய மினிகுடிநீர் தொட்டி கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அங்கிருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.