திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லெட்சுமிபுரம் ரோட்டில் வெள்ளை பிள்ளை நகர் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் தோண்டப்பட்ட பள்ளங்கள் கம்பிகளுடன் ஆபத்தான முறையில் உள்ளது. இந்த ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர் மற்றும் இந்த தெருவில் பள்ளி செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றது. எனவே, ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.