திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. எனவே மழைநீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் அங்கு தடுப்பணை கட்ட வேண்டியது அவசியமாகும்.