கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரிக்கு புதூர் ஏரியிலிருந்து உபரிநீர் வருகிறது. ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத வகையில் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கு தண்ணீர் செல்லாமல் விவசாய நிலத்தில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலத்தில் தேங்கும் தண்ணீரை சமுத்திரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?