சுகாதாரமற்ற குடிநீர்

Update: 2024-12-29 16:59 GMT

மதுரை நகர் 49-வது வார்டு நெல்பேட்டையில் காயிதே மில்லத் நகர் 1-வது தெருவில் உள்ள பொது குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்து தண்ணீர்  வருகிறது. மேலும் இந்த தண்ணீர் அதிக துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..



மேலும் செய்திகள்