கொடுப்பகுழி பகுதியில் இருந்து நாயக்கன்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கொடுப்பகுழி, கட்டிமாங்கோடு, நாயக்கன்விளை சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியின் நீரேற்று குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் வீணாவதுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகமும் தடைப்பட்டுள்ளது. தற்போது சேதமடைந்த குழாய் மாற்றப்படாமல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. எனினும் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குழாயை அகற்றி புதிய குழாய் இணைத்து முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.