சென்னை பெரம்பூர் அடுத்து செம்பியன் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள் மின்வாரிய செயல் பொறியாளர் அலுவலகம், காந்தி நகர் மின்வாரிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கு, மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு இயங்கி வருகிறது. மேலும், மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு புகார் தெரிவிக்கவும் ஏராளமான மக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால், மழைநீர் வெளியேறாமல் வளாகத்திற்குள் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.