கரும்பாட்டூர் ஊராட்சி பகுதியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் தாமரை கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தின் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?.
-செல்வகுமார், தென்தாமரைக்குளம்.