வீணாகும் குடிநீர்

Update: 2024-12-15 18:43 GMT


திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கருமாரம்பாளையம் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜகுமார், மண்ணரை.

மேலும் செய்திகள்