திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி கோலப்பன் சேரி பஜனை கோவில் தெரு, தண்டுறை மெயின் ரோடு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது மிகவும் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். எனவே, எவ்வித உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.