தேங்கிய மழைநீர்

Update: 2024-12-15 11:54 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி, 3-வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் சிறிது மழை பெய்தாலே குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சிறிது மழையின்போது தேங்கிய நீர் 3 முதல் 4 நாட்கள் வெளியேறாமல் குட்டைபோல் தேங்கிவிடுகிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்