விழுப்புரம் தேவநாதசுவாமி நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் அனைத்தும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?