புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலையில் உள்ள சந்தைப்பேட்டை அய்யப்பன் கோவில் அருகே ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இதுநாள் வரை செயல்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மண்டி கிடக்கின்றது. விராலிமலை பகுதிகளில் காவிரி குடிநீரானது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.