புதுக்கோட்டை மாவட்டம், கல்லக்கோட்டையில் நெடுவாய்குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை நம்பி அப்பகுதியில் 95 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. தற்போது இந்த குளத்தில் கலிங்கு உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் விவசாயிகள் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த கலிங்கு பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.