திருப்பூர்-ஊத்துக்குளி சாலையிலிருந்து ஒற்றைக்கண் பாலத்திலிருந்து இரண்டாவது ரெயில்வே கேட் செல்லும் புதுராமகிருஷ்ணபுரம் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகிக்கும் நேரத்தில் அதிக அளவில் குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. குழாய் உடைப்பால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளதால் பக்தர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதன்கோபால், திருப்பூர்.