கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் புதூர் அருகே குடிநீர் தேவைக்காக வனத்துறை சார்பில் தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வாகனங்களை இறக்கி கழுவுவதாலும், துணிகளை துவைப்பதாலும் குடிநீர் அசுத்தமாகி வருகிறது. எனவே குடிநீர் மாசுபடாமல் தடுக்க அங்கு வேலி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.